திண்டிவனத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் பாண்டிச்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. மயிலம் இரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது.
இங்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்திற்குப் பின் சூரபத்மன் முருகப்பெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்க வேண்டினான். அதற்கு முருகப்பெருமான், இந்தத் தலத்தில் மயில் வடிவில் தவம் புரியும்படி அருளினார். அதன்படி சூரபத்மன் இங்கு தவம் புரிந்து முருகப்பெருமானுக்கு மயிலாக மாறினான். அதனால் இத்தலம் மயிலம் என்று அழைக்கப்படுகிறது. |